Tuesday, March 16, 2010

சுவராஸ்யமான பின்னூட்டம்...


பாலா ரோஸ்விக்குடன்...

சுதாகரின் (பித்தனின் வாக்கு) இடுகையில் பின்னூட்டத்தில் நம்ம பாலா ஒர் சம்பவத்தை அழகாய் சொல்ல, கேபிள் அண்ணாவுக்கு பின்னூட்டத்தையும் சேர்த்து ஒரு இடுகையாய் இங்கே!

ஐயா (சில்க்)பித்தன் அவர்களே!


பதிவு மிக நன்றாக இருந்தது! உங்களைப்போலவே எனக்கும் ஒரு அனுபவம்.


பத்தாவது படித்து முடிக்கும் வரை தனியாக சினிமாவுக்கு போனதில்லை. குடும்பத்துடன் தான். என்னுடைய பத்தாவது தேர்வு முடிந்தவுடன் தனியாக சினிமாவுக்கு போக அனுமதி கிடைத்தது. ஏதோ ஒரு படத்திற்கு போகலாம் என்று முடிவுசெய்து போஸ்டரை பார்த்துவந்து கிளம்பிக்கொண்டு (கிளப்பியல்ல) இருந்தேன். பக்கத்தில் (3 km ) இருந்த டூரிங் டாக்கீஸ், படம் : இளமை ஊஞ்சலாடுகிறது. எனக்கு படத்தின் தன்மை தெரியாது. என் தந்தைக்கு தெரியும் போல். அதுவரை அவரும் கேட்கவில்லை, நானும் என்னபடம் என்று சொல்லவில்லை.


சைக்கிளை எடுத்து வெளியே வைத்து காற்று அடித்தேன். துடைத்தேன். மணி பார்த்தேன். கிளம்ப சரியாக இருந்தது. வெளியே வந்தேன்.


அப்பொழுது நடந்தது கீழே:


ட்ட்
அப்பா: பார்த்து போயிட்டு வா.
நான்: சரிங்கப்பா.
அப்பா: எந்த தியேட்டர்?
நான்: ' xxxxxxxxxx ' தியேட்டர்.
அப்பா: என்ன படம்?
நான்: 'இளமை ஊஞ்சலாடுகிறது'
அப்பா: இளமை உஞ்சலாடுதோ, கமினாட்டி என்ன படத்துக்கு போகுது பாரு. உருப்புடவாபோற நீ. சைக்கிள வச்சிட்டு போய் மாட்டுக்கு தண்ணி காட்டு.
நான்: திரு திருவென்று விழித்தேன். இளமை ஊஞ்சலாடுகிறது படத்தைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது அப்பொழுது. ஆனால் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற வெறி மட்டும் கிளம்பிவிட்டது.


அதே வெறியுடன் அந்த படத்தை 4 ஆண்டுகளுக்கு பிறகு பார்த்தேன்.
இப்படிதான் ஊஞ்சலாடி கிளம்பியது என் இளமை!


இப்படிக்கு,
பண்புடன் வாழ நினைக்கும் (ஆனால் முடியவில்லை ) பாலா.

இது கேபிள் அண்ணாவுக்கு இட்டிருக்கும் பின்னூட்டம்...


காணவில்லை அறிவிப்பு


பெயர்: கேபிள் சங்கர்
தொழில்: எல்லோரையும் கலாய்ப்பது (குறிப்பாக இதர சினிமா டைரேடர்களை)
வயது: Youth என்று பினாத்துகிறார். ஆனால் சரியான வயதில் அவருக்கு கல்யாணம் ஆகியிருந்தால் இந்நேரம் தாத்தாவாகியிருப்பார்.
காணாமல் போன இடம் : சிங்கப்பூர்
சேர்ந்திருக்கவேண்டிய இடம் : சென்னை.
அடையாளம்: அப்பாவி போல் தெரிவார். ஓரளவிற்கு தெளிந்த அறிவுதான் (சரக்கு அடிக்கும் வரை). சினிமாவை பற்றி நன்றாக பேசுவார். நன்றாக குறட்டை விடுவார். (யப்பா சாமி )


கண்டுபிடித்து கொடுப்பவருக்கு இனாமாக ஏதாவது கொடுக்கப்படும்.
பின்னூட்டங்களில் அசத்தும் பாலா இடுகையும் எழுத வேண்டும் எனும் அன்பு வேண்டுகோளை வைக்கிறேன்...

8 comments:

’மனவிழி’சத்ரியன் said...

பிரபாகர்,

//இளமை உஞ்சலாடுதோ?

கம்மனாட்டி என்ன படத்துக்கு போகுது பாரு.!

உருப்புடவாபோற நீ?

சைக்கிள வச்சிட்டு போய் மாட்டுக்கு தண்ணி காட்டு.//

அடப்பாவமே...! இப்பிடியாகிப்போச்சா உன் நெலம?

வானம்பாடிகள் said...

முதல்ல 51க்கு வாழ்த்துகள். பாலாவ இறக்கி விட்டு வேடிக்க பார்க்க முடிவா. ரைட்டு:)

ஈரோடு கதிர் said...

:))

இராகவன் நைஜிரியா said...

ஹி... ஹி....


:-)

க.பாலாசி said...

சுவாரசியம்....

திவ்யாஹரி said...

வருக பாலா.. :)

ரோஸ்விக் said...

பாவம்ங்க அவரையும் நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா.... :-))

பாலா அண்ணே எழுதுங்க... உங்களுக்கு எழுதுவது பிடித்திருந்தால்... உங்களுக்கு நிறைய நகைச்சுவை இயல்பாகவே வருகிறது.... அனுபவமும் அப்படி போல...

ஒட்டு... ஹிட்டு மனதில் முதன்மையாகத் தோன்றினால்... சுயம் இழக்க நேரிடும்... :-)

ஸ்ரீ.கிருஷ்ணா said...

இதுக்கும் பின்னூட்டம் போட்டாச்சி சார் ..
intresting commens really they are..