Sunday, January 3, 2010

நடன நிகழ்ச்சிகள் - ஒரு சாடல்.

இங்கு சிங்கையில் தெரியும் தமிழ் சேனல்கள் சன், விஜய், வசந்தம் மற்றும் வண்ணத்திரை ஆகிய நான்கும். பொதுவாக தொலைக்காட்சியை அதிகம் பார்ப்பதில்லை அது நம்முடைய நேரத்தைக் கொன்று கொளுத்திப்போடும் என்பதால். அதிகமாய் பாடல்களை கேட்பதோடு சரி, கேட்டுக்கொண்டு நமது வேலைகளைத் தொடரலாம் என்பதால். நமது மனநிலைக்கேற்றவாறுதான் எந்த ஒரு பாடலாயிருந்தாலும் நம்முள் ஆக்கிரமிப்பதும் புறந்தள்ளப்படுவதும்.

நடன நிகழ்ச்சிகளுடன் கூடிய சில நிகழ்ச்சிகளை எதேச்சையாய் பார்க்க நேர்ந்தபோது என்னால் கொஞ்சம் கூட ஜீரணிக்க இயலாமல் மனம் கொதிப்புறவே இந்த இடுகை.

பாய்ஸ் VS கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியும் அதற்கு போட்டியாய் ராணி 6 ராஜா யாரு என்ற நிகழ்ச்சிகள் மொத்தமாய் கலாச்சார சீர்கேடாய் இருக்கிறது.

எல்லாம் செயற்கைத்தனமாயும், போட்டி பொறாமை என நாடகத்தனமாயும் இருக்க, குறிப்பாக ராணி 6... ல் இதுவரை சினிமாக்களில் மட்டுமே கண்டுவந்த அரைகுறை ஆடைகளில் ஆபாசமான அங்க அசைவுகளுடன் கூடிய நிகழ்வுகள் வெகு சாதாரணமாய்... கொடுமை.

இதை பார்க்கும் போது குழந்தைகள், பெற்றோர் என அவர்களின் மனநிலை என்னாகும் என எண்ணும் போது மனம் வேதனையுறுகிறது. இதற்கு அவர்கள் விளம்பரப்படுத்தும் உத்திகள் யாவும் பார்க்கும் போது ஆகா, தமிழ் கலாச்சாரம் வளர என்னமாய் பாடுபடுகிறார்கள் தமிழை வாழவைக்கிறோம் என சொல்லும் இவர்கள் எனத்தோன்றுகிறது.

இந்த இரட்டைவேடமிடும் இந்த கலாச்சாரத்தை சீரழிக்கும் இவர்களைப் பற்றியும் கொஞ்சம் சிந்திப்போமா? நமது குழந்தை செல்வங்களை இந்த மாய வலையில் வீழ்ந்து விடாமால் பாதுகாப்போமா?

தவறெனில் பின்னூட்டத்தில் சுட்டுங்கள்...

45 comments:

தீபக் வாசுதேவன் said...

போக்கிரி திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் வரும் நெப்போலியன் சொல்வது போல "பச்சக் என்று டி. ஆர். பி. ரேடிங் ஏற்றும்" குறிக்கோள் மட்டும் கொண்டுள்ள இந்த தனியார் தொலைக்காட்சிகளிடம் வேறென்னஎதிர்பார்கிறீர்கள்?

Mahesh said...

வருஷ ஆரம்பமே இடுகை காரமா இருக்கே.... :)

பிரபாகர் said...

//

உங்கள் முதல் வருகை மற்றும் கருத்துக்கு நன்றிங்க. ஊடக விபச்சாரம். மனசு கேக்கலைங்க, அதான்.

//
Mahesh said...
வருஷ ஆரம்பமே இடுகை காரமா இருக்கே.... :)
//
வணக்கம் மகேஷ்... பார்த்ததும் கொஞ்சம் எகிறிடுச்சி, உடன் பகிர்ந்துகிட்டேன். நன்றிங்க.

ரோஸ்விக் said...

ஊடக விபச்சாரம் பெருகிவிட்டது அண்ணா. அந்த நிறுவனங்களை மட்டும் குறை சொல்ல முடியாது... என்னத்த சொல்ல... நம்மவர்களின்(நான் உட்பட) மனங்கள் பாழ்பட்டு பல வருடம் ஆகிவிட்டது. இதை எதிர்த்தால் கலாச்சார காவலர்கள் ஆவீர்கள். ஆதரித்தால் நற்குடி கேள்வி எழும். பார்த்து அனுபவித்தால் ... ???

அவர்களுக்குத் தேவை டி.ஆர்.பி ரேட்டிங். அவர்கள் யாரையும் பலவந்தமாக இது போல் ஆடை அணிய செய்வதில்லை. அவர்களாக விரும்பி செய்யும்போது நாமும் ஒன்னும் செய்ய இயலாது.

கண்மணி/kanmani said...

சினிமாவால் வெளியே போய்த்தான் கெட்டோம்.சின்னத்திரை வீட்டிற்கு உள்ளேயே வந்து கெடுக்கிறது

தராசு said...

அப்படிப் போடு அருவாள,

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஈரோடு கதிர் said...

இன்னிக்கு நிகழ்ச்சியில அபிநயஸ்ரீ போட்டிருந்த கால் சட்டைய அடுத்த வாரம் அங்கே ஒளிபரப்பு செய்யும் போது பார்த்துடாதீங்க பிரபா...

(ஏதோ நம்மால முடிஞ்சது!!!)

கும்க்கி said...

அய்யய்யோ...
என்ன ப்ரபா நீங்கள்...
எங்க புள்ளைங்கள்லாம் அப்புறம் ஸ்கூலில் எப்படி ஆடி பரிசு வெல்வதாம்..

ஓவ்வொரு ஸ்கூல் பங்ஷனுக்கும் ட்ரஸ்ஸே இத பார்த்துத்தான் தயார் செய்றாங்க...எல்லாத்துக்கும் ஆப்பு வச்சுடுவீங்க போலருக்கே...

கண்ணா.. said...

இப்போதைய காலகட்டத்தில், நாம் என்ன புலம்பினாலும் அவர்கள் அதை நிறுத்த போவதில்லை. அதிகம் பேர் இதை பார்க்கிறார்கள் என்பதைதான் டிஆர்பி காட்டுகிறது.

நாம் இதை பற்றி புலம்புவதை விட எப்படி இதன் விளைவுகளி்ன் மோசமான பக்கத்தை எப்படி தவிர்ப்பது என யோசிப்பதுதான் ஓரே வழி

அஹோரி said...

//இதை பார்க்கும் போது குழந்தைகள், பெற்றோர் என அவர்களின் மனநிலை என்னாகும் என எண்ணும் போது மனம் வேதனையுறுகிறது.//
உண்மை.

//தமிழ் கலாச்சாரம் வளர என்னமாய் பாடுபடுகிறார்கள் தமிழை வாழவைக்கிறோம் என சொல்லும் இவர்கள் எனத்தோன்றுகிறது.//
இன்னமுமா அந்த கூட்டத்த நம்புறீங்க.

சங்கர் said...

அண்ணே, இதுங்களை எல்லாம் திருத்த முடியாது, ஒரே வழி ரிமோட் தான்

இராகவன் நைஜிரியா said...

நல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன்... இந்த கண்றாவி எல்லாம் இங்கு தெரிவதில்லை.

Azhagan said...

You are absolutely right. These are disgusting events. It is high time that the Govt. forms a censor committee for the television media.

பிரபாகர் said...

//
தராசு said...
அப்படிப் போடு அருவாள,

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
//
அண்ணே, வாழ்த்துக்கள். நீங்கள் ஊருக்கு சென்று வந்தாச்சா? வந்தபின் பேசலாம் என வருகைக்காக காத்திருக்கிறேன்.

//
ஈரோடு கதிர் said...
இன்னிக்கு நிகழ்ச்சியில அபிநயஸ்ரீ போட்டிருந்த கால் சட்டைய அடுத்த வாரம் அங்கே ஒளிபரப்பு செய்யும் போது பார்த்துடாதீங்க பிரபா...

(ஏதோ நம்மால முடிஞ்சது!!!)
//
அந்த கருமத்த ஏன் பாக்கறேன்? அதுவும் குறிப்பா நீங்க சொன்னதுக்கப்புறம்?

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
ஊடக விபச்சாரம் பெருகிவிட்டது அண்ணா. அந்த நிறுவனங்களை மட்டும் குறை சொல்ல முடியாது... என்னத்த சொல்ல... நம்மவர்களின்(நான் உட்பட) மனங்கள் பாழ்பட்டு பல வருடம் ஆகிவிட்டது. இதை எதிர்த்தால் கலாச்சார காவலர்கள் ஆவீர்கள். ஆதரித்தால் நற்குடி கேள்வி எழும். பார்த்து அனுபவித்தால் ... ???

அவர்களுக்குத் தேவை டி.ஆர்.பி ரேட்டிங். அவர்கள் யாரையும் பலவந்தமாக இது போல் ஆடை அணிய செய்வதில்லை. அவர்களாக விரும்பி செய்யும்போது நாமும் ஒன்னும் செய்ய இயலாது.
//
அட்லீஸ்ட் நான் வெறுத்தொதுக்குவோம் தம்பி, அதற்காகத்தான் இந்த இடுகை.

//
கண்மணி said...
சினிமாவால் வெளியே போய்த்தான் கெட்டோம்.சின்னத்திரை வீட்டிற்கு உள்ளேயே வந்து கெடுக்கிறது
//
ஆமாங்க. இது எங்கே போய் முடியுமோ என்கின்ற ஆதங்கம்தான் இந்த இடுகை.

பிரபாகர் said...

//
இராகவன் நைஜிரியா said...
நல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன்... இந்த கண்றாவி எல்லாம் இங்கு தெரிவதில்லை.
//
அண்ணே, கொடுத்து வைத்தவர் நீங்கள்...

//
Azhagan said...
You are absolutely right. These are disgusting events. It is high time that the Govt. forms a censor committee for the television media.
//
உங்களது கருத்தை முழுதாய் ஆமோதிக்கிறேன். கண்டிப்பாய் தேவை. செய்தாலும் அதன் அளவுகோல் என்ன என்பது அடுத்த கேள்வி!

பிரபாகர் said...

//
அஹோரி said...
//இதை பார்க்கும் போது குழந்தைகள், பெற்றோர் என அவர்களின் மனநிலை என்னாகும் என எண்ணும் போது மனம் வேதனையுறுகிறது.//
உண்மை.

//தமிழ் கலாச்சாரம் வளர என்னமாய் பாடுபடுகிறார்கள் தமிழை வாழவைக்கிறோம் என சொல்லும் இவர்கள் எனத்தோன்றுகிறது.//
இன்னமுமா அந்த கூட்டத்த நம்புறீங்க.
//
சுத்தமா இல்லை. நிறைய பேர் இருக்கிறாங்களே?

//
சங்கர் said...
அண்ணே, இதுங்களை எல்லாம் திருத்த முடியாது, ஒரே வழி ரிமோட் தான்
//
ஆம் சங்கர், ரிமோட்டை தொடுவதையும் தவிர்த்தல் இன்னும் சாலச்சிறந்தது.

பிரபாகர் said...

//
கும்க்கி said...
அய்யய்யோ...
என்ன ப்ரபா நீங்கள்...
எங்க புள்ளைங்கள்லாம் அப்புறம் ஸ்கூலில் எப்படி ஆடி பரிசு வெல்வதாம்..

ஓவ்வொரு ஸ்கூல் பங்ஷனுக்கும் ட்ரஸ்ஸே இத பார்த்துத்தான் தயார் செய்றாங்க...எல்லாத்துக்கும் ஆப்பு வச்சுடுவீங்க போலருக்கே...
//
அதாங்க, இது எங்க போய் முடியும்னு தெரியல!

//
கண்ணா.. said...
இப்போதைய காலகட்டத்தில், நாம் என்ன புலம்பினாலும் அவர்கள் அதை நிறுத்த போவதில்லை. அதிகம் பேர் இதை பார்க்கிறார்கள் என்பதைதான் டிஆர்பி காட்டுகிறது.

நாம் இதை பற்றி புலம்புவதை விட எப்படி இதன் விளைவுகளி்ன் மோசமான பக்கத்தை எப்படி தவிர்ப்பது என யோசிப்பதுதான் ஓரே வழி
//
ஆம் கண்ணா, கண்டிப்பாய் செய்ய வேண்டும்.

துபாய் ராஜா said...

நியாயமான அறச்சீற்றம்.

வரும் தலைமுறை நல்லபடி வளர வேண்டுமானால் இந்த மாதிரி தமிழ் ஈனத் தொலைக்காட்சிகளை வீட்டுக்குள் சேர்க்காமல் தவிர்க்கவேண்டும்.

கலகலப்ரியா said...

ம்ம்... நானு டிவி பார்க்கறதில்ல... அதிலயும் இந்த சேனல்ஸ் எல்லாம் நோ சான்ஸ்.. ஆனாலும் எடுத்துச் சொன்னது நல்ல விஷயம் அண்ணா.... :)

Cable Sankar said...

/இன்னிக்கு நிகழ்ச்சியில அபிநயஸ்ரீ போட்டிருந்த கால் சட்டைய அடுத்த வாரம் அங்கே ஒளிபரப்பு செய்யும் போது பார்த்துடாதீங்க பிரபா.//

கதிர் இங்கே ரிப்பீட் எப்ப போடுவாங்க..?

ஜோக்ஸ் அபார்ட்
இம்மாதிரியான நிகழ்ச்சிகள் வருவது பிடிக்கவில்லை எனில் அதை ஈஸியாய் வெளியேற்ற முடியும். நிகழ்ச்சியை பர்ப்பதா இல்லியா என்பதை நீங்கள் உங்கள் குடும்பத்தோடு பார்க்காமல் இருந்தால் (அதாவது பிடிக்கவில்லை என்று சொல்லும் ஒவ்வொரு குடும்பத்தினரும்) முடிவு செய்து அந்த நேரத்தில் வேறு டிஸ்கவரியோ, என்.ஜி.சியொ,ஹிஸ்டரியோ பாருங்கள் நிச்சயம் உங்களது எண்ணம் டி.ஆர்.பியில் தெரியும். அப்படி தெரியும் போது செல்ப் எடுக்காத நிகழ்ச்சிகள் தூக்கப்படும்.

அண்ணா, புரிகிறது. அவர்களுக்கு சென்ஸ் இல்லையே எனும் ஆதங்கம், ஒதுக்குவோமே என்றும் எழுதியது.

பிரபாகர் said...

துபாய் ராஜா said...
நியாயமான அறச்சீற்றம்.

வரும் தலைமுறை நல்லபடி வளர வேண்டுமானால் இந்த மாதிரி தமிழ் ஈனத் தொலைக்காட்சிகளை வீட்டுக்குள் சேர்க்காமல் தவிர்க்கவேண்டும்.
//
ஆம் ராஜா. முதல் ஆளாய் நாம் இருப்போம்.

//
கலகலப்ரியா said...
ம்ம்... நானு டிவி பார்க்கறதில்ல... அதிலயும் இந்த சேனல்ஸ் எல்லாம் நோ சான்ஸ்.. ஆனாலும் எடுத்துச் சொன்னது நல்ல விஷயம் அண்ணா.... :)
//
நன்றி சகோதரி!

வானம்பாடிகள் said...

ஏப்பு. அல்லாரும் மாஞ்சி மாஞ்சி தமிழ்க் கலாச்சாரம்னு குதிக்கிறமே. அப்புடின்னா என்னப்பு. அத கொஞ்சம் வெவரமா இடுகை போட்டா தெரிஞ்சிக்குவம்ல.

மணிப்பக்கம் said...

கலாநிதி மாறனின் வியாபாரமே அலாதியானது, ஒருநாள் அவர் முதல்வர் பதவியில் உட்காரபோவது உறுதி! தமிழக கலாசாரத்தை செதுக்கும் நவீன சிற்பி க.நி.மாறன்! வாழ்க சன் குழுமம்...!

ஜெட்லி said...

மேலே ஐயா சரியான கேள்வி கேட்டுருக்காரு...

அழகு நிலவன் said...

ஒவ்வொறு பெற்றோறும் சிந்திக்கவேண்டிய கருத்து, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

நான் டிவியே பார்க்கமாட்டேன். அதனால் நிம்மதி. அப்படியும் வீட்டுலே எப்பவாவது இவர் டிவி பார்க்கும்போதோ இல்லை வீட்டுவேலைகளுக்கிடையில் கொஞ்சம் உக்காரும்போதோ..... கண்ணில் பட்டுரும். போச்சுடான்னு எரிச்சல்தான். அதுவும் இந்த ஜூனியர் சிங்கர்.......

ஐயோ.....

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஏகப்பட்ட கூத்தெல்லாம் நடக்குதுங்க ..

பூங்குன்றன்.வே said...

நல்ல இடுகையும்,நியாயமான ஆதங்கமும் பிரபாகர்.

பிரபாகர் said...

//
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ஏகப்பட்ட கூத்தெல்லாம் நடக்குதுங்க ..
//
ஆமாங்க சகோதரா!

//
பூங்குன்றன்.வே said...
நல்ல இடுகையும்,நியாயமான ஆதங்கமும் பிரபாகர்.
//
நன்றி பூங்குன்றன்...

பிரபாகர் said...

//
துளசி கோபால் said...
நான் டிவியே பார்க்கமாட்டேன். அதனால் நிம்மதி. அப்படியும் வீட்டுலே எப்பவாவது இவர் டிவி பார்க்கும்போதோ இல்லை வீட்டுவேலைகளுக்கிடையில் கொஞ்சம் உக்காரும்போதோ..... கண்ணில் பட்டுரும். போச்சுடான்னு எரிச்சல்தான். அதுவும் இந்த ஜூனியர் சிங்கர்.......

ஐயோ.....
//
நன்றிங்க மேடம்... சரியாத்தான் சொல்றீங்க!

//
henry J said...
தினசரி 10 விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் Trekpay PTC இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html
//
நன்றிங்க!

பிரபாகர் said...

//
ஜெட்லி said...
மேலே ஐயா சரியான கேள்வி கேட்டுருக்காரு...
//
ஆமாம் ஜெட்லி, அய்யாவோட கேள்வி எப்போதும் பொருள் படிந்ததாய் இருக்கும்.

//
அழகு நிலவன் said...
ஒவ்வொறு பெற்றோறும் சிந்திக்கவேண்டிய கருத்து, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
//
நன்றிங்க அழகு நிலவன்!

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
ஏப்பு. அல்லாரும் மாஞ்சி மாஞ்சி தமிழ்க் கலாச்சாரம்னு குதிக்கிறமே. அப்புடின்னா என்னப்பு. அத கொஞ்சம் வெவரமா இடுகை போட்டா தெரிஞ்சிக்குவம்ல.
//
ஹி, ஹி, இந்த மாதிரி எழுதறதுதான்...

//
மணிப்பக்கம் said...
கலாநிதி மாறனின் வியாபாரமே அலாதியானது, ஒருநாள் அவர் முதல்வர் பதவியில் உட்காரபோவது உறுதி! தமிழக கலாசாரத்தை செதுக்கும் நவீன சிற்பி க.நி.மாறன்! வாழ்க சன் குழுமம்...!
//
நன்றிங்க நண்பா உங்களின் அருமையான விளக்கத்துக்கு...

நாஞ்சில் பிரதாப் said...

அதெல்லாம் நீங்க ஏண்ணே பார்க்கப்போறீங்க... அதுக்கு விஜய்படமே பார்த்திரலாமே ரெண்டும் கொடுமைதான்...என்னப்பண்றது அவனுங்களுக்கு காசு பண்ணனும்...நாடு எக்கேடுகெட்டுப்போனா என்ன?
இனிமே பார்க்காதீங்கன்ன

ரிஷபன் said...

டிவி வந்ததை எப்படி எல்லாம் தப்பான வழியில பயன்படுத்தறாங்கனு பார்க்கும்போது நிஜமாவே தாங்க முடியல.. எங்க வீட்டுல நாங்க பார்க்கறதில்லன்னு சில நண்பர்கள் சொல்லும்போது இந்த எண்ணிக்கையை இந்த மாதிரி பதிவுகள் அதிகப் படுத்த உதவும்.

ரேவதி சீனிவாசன் said...

நாம ஆதங்க பட்டு என்ன பண்றது? எல்லாரும் மனசு வச்சாதான் இந்த அசிங்க கூத்தை தடுக்க முடியும். தனியார் தொலைக்காட்சியே வேண்டாம்னு எல்லாரும் முடிவு எடுத்தால்தான் இதுக்கு ஒரே தீர்வு....

goma said...

ஒரு வகையில் இது கூட நல்ல விஷயம்தான்.தொலைக்காட்சி பெட்டியிடமிருந்து நம்மை சுலபமாக விடுவித்துக் கொள்ளலாம்.
கறை நல்லது பாணியில் மாத்தி யோசிங்க

ஆமாங்க! சாத்தியமான்னுதான் தெரியல...

//
goma said...
ஒரு வகையில் இது கூட நல்ல விஷயம்தான்.தொலைக்காட்சி பெட்டியிடமிருந்து நம்மை சுலபமாக விடுவித்துக் கொள்ளலாம்.
கறை நல்லது பாணியில் மாத்தி யோசிங்க
//
மாத்தி யோசிக்கிற மனநிலையிலதான் இல்லையே, அதனால தாங்க இந்த இடுகை. முதல் வருகை மற்றும் கருத்துக்கு நன்றிங்க....

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
அதெல்லாம் நீங்க ஏண்ணே பார்க்கப்போறீங்க... அதுக்கு விஜய்படமே பார்த்திரலாமே ரெண்டும் கொடுமைதான்...என்னப்பண்றது அவனுங்களுக்கு காசு பண்ணனும்...நாடு எக்கேடுகெட்டுப்போனா என்ன?
இனிமே பார்க்காதீங்கன்ன
//
சிரத்தை எடுத்தெல்லாம் பாக்கிறதில்ல பிரதாப்... எதேச்சையா பாக்கும்போது ஏற்பட்ட பாதிப்பில எழுதினது...

//
ரிஷபன் said...
டிவி வந்ததை எப்படி எல்லாம் தப்பான வழியில பயன்படுத்தறாங்கனு பார்க்கும்போது நிஜமாவே தாங்க முடியல.. எங்க வீட்டுல நாங்க பார்க்கறதில்லன்னு சில நண்பர்கள் சொல்லும்போது இந்த எண்ணிக்கையை இந்த மாதிரி பதிவுகள் அதிகப் படுத்த உதவும்.
//

நன்றி ரிஷபன். உங்களின் கருத்து மிகச்சரியானதே!

மோகன் குமார் said...

நல்ல பதிவு நண்பா.. என் பொண்ணு சில நிகழ்ச்சி (பாய்ஸ் Vs கேர்ல்ஸ்) பார்க்கனும்பா.. ஆனா அது வேற வாழ்க்கை வேற என்ற தெளிவு இருக்குன்னு தான் நினைக்கிறேன்..

அடுத்த மாதம் நீங்க சென்னை வருவாதகவும் அப்பா சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பு இருக்கும்னும் தண்டோரா நேற்று சொன்னார். சென்னையில் உங்களை நேரில் சந்திக்கிறேன்.

அன்புடன் மலிக்கா said...

பிரபாகரண்ணா இதுக்குதான் நம்ம இதையெல்லாம் பார்க்கிரதேயில்லை
நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்.

பதிவு சூப்பர்

சி. கருணாகரசு said...

சரியான ஆதங்கம்....வேறு என்ன சொல்ல?

உங்கலுக்கும் குடும்பத்தினருக்கும் எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

இந்த நிலைமையை எப்படி மாற்ற முடியும்...? மக்களை நம்பியே ஊடகங்கள் உள்ளன... அதை அவர்கள் உணராமல், எதை வேண்டுமானாலும் போட்டு விடலாம் என்ற எண்ணத்தோடு உலாவுகின்றனர்... இவர்களுக்கு நல்லதொரு எதிர்ப்பை பொறுப்புள்ள பதிவர்களை நாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்..
வெள்ளித்திரை.. சின்னத்திரை, பத்திரிக்கைத் துறை ஆகிய அனைத்தும் பணம் காசுகளால் மாறி விட்டன..
நம் பதிவர்கள் மட்டுமே, காசு பணம் தேடாமல் மன நிம்மதியோடு நம் எண்ணங்களைப் பதிவிடுகிறோம்.. இந்த உலகம் மாசுராமல் இருக்க வேண்டும் என்று என் மனம் மிக ஆசைப் படுகிறது..

என்ன சொல்கிறீர்..

இதற்காக நாம் என்ன செய்ய வேண்டுமோ, அதையும் நாம் ஆராய வேண்டும்..

நன்றி..