Sunday, December 27, 2009

நற்குடியோ நாமெல்லாம்...

தான் தான் பெரிதென்று
தன்னினம் இழித்துவோர்
இனமானம் காக்க
என்னமாய் போராட்டம்

தான் தான் நற்குடி
தறிகெட்டோர் மற்றெல்லாம்
வீண் வாதம் செய்தலில்
விளங்குது அவர்குடி.

பசுவின் சாணம்மென
புலம்பும் உமதெல்லாம்
வீசும் மணத்துடன்
எருமையின் சாணமோ?

ஏசும் முன் யோசிப்போம்
ஏசுதலிம் கண்ணியம்
என்றுமே இருத்தல்தான்
பேசுதலில் நன்று

மழித்த தன்மானம்
மகிழ்வாய் உமைப்பற்றி
வழிதொடர்வோர் புரியாமல்
வாய்க்கு வந்தபடி

இழிச்சொல்லால் கவியென்ற
ஈனத்தை எடுத்தெறிந்து
கழிவென கழித்திட்டு
காறியதை உமிழ்ந்திடுவோம்...

27 comments:

ஹேமா said...

பிரபா ஒவ்வொரு பந்தியும் சாட்டையடி.உங்கள் தலைப்பே மனதின் வைராக்கியம் சொல்கிறதே !

வானம்பாடிகள் said...

/இழிச்சொல்லால் கவியென்ற
ஈனத்தை எடுத்தெறிந்து
கழிவென கழித்திட்டு
காறியதை உமிழ்ந்திடுவோம்.../

ரிப்பீட்டேய்.

சின்ன அம்மிணி said...

:) விட்டுத்தள்ளுங்க, திருந்தமாட்டாங்க ஒரு சிலர்.

துளசி கோபால் said...

அட ராமா......

துபாய் ராஜா said...

அப்படி போடு 'அறிவாலே'....

கலகலப்ரியா said...

அண்ணா... ஏன்-ணா... கடவுளே... முடியல... ஆனாலும் கவிதை அருமை..

SanjaiGandhi™ said...

உம்மின ஆண்கூட
குடிக்க மாட்டார்களா???
என்று கேள்வி எழுப்பி,
தம்மினப் பெண்களும்
குடிப்பார்கள் என்று
பறைசாற்றி, தம்மை,
நற்‘குடி’யாகக் காட்டிக் கொண்ட
தகர டப்பாக்கள்!

:))))))))))))))))))))

யாரெல்லாம் என் இனம்? :))

நாகா said...

what? when? who? why?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

பிரபாகர்..

எனக்கு கவிதை எழுத வராது.. ஆனா கோபம் மட்டும் இருக்கு..!

மனிதர்கள்தான் எத்தனை, எத்தனை வகைகள் பாருங்கள்..?

ம்ஹும்.. இவங்க திருந்த மாட்டாங்க..!

கார்த்திகைப் பாண்டியன் said...

விடுங்க தலைவரே..

குடுகுடுப்பை said...

சுவற்றில் முட்டினால் மண்டைதான் உடையும்.

மயில் said...

kirrrrrrrrrrrrrr

Rajasurian said...

கவிதை அருமை. ஆனாலும் இந்த மேட்டர விட்டுடலாமே பாஸ். புரிந்து கொள்ளும் மனமில்லாதவர்களிடம் சொல்வது நேர விரயம்தான்.

கண்ணா.. said...

//ஏசும் முன் யோசிப்போம்
ஏசுதலிம் கண்ணியம்
என்றுமே இருத்தல்தான்
பேசுதலில் நன்று//

உங்கள் கருத்தை அழகாக கூறிவிட்டீர்கள்.

அதை புரிந்து கொள்ளாதவர்கள் கவிதை எழுதினால் அதை புறந்தள்ளி விடுங்கள். இதை இப்படியே விட்டு விடுங்கள்.அதுதான் அனைவருக்கும் நல்லது.


அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கமெண்டுகளை வெளிவிடுவதில் கவனம் தேவை.


அது அவருக்கு பதில் மற்ற இஸ்லாமிய சகோதரர்களை புண்படுத்திவிட கூடாது.

மற்றபடி அவர்கள் அந்த வார்த்தைக்கு வருத்தம் தெரிவிக்காததும், எதிர் பதிவு, எதிர் பதிவிற்கு எதிர் பதிவு என்ற அளவிற்கு போனதை பார்த்தால் மனம் மிகவும் வருந்துகிறது.


வடகரை வேலன் அண்ணாச்சி சொன்னதை இப்போது நான் ஓத்து கொள்கிறேன்.

சென்சிடிவ் ஆன பதிவுகள் இந்த விஷயத்தில் இப்போதைக்கு வேண்டாம் நண்பா.

:(

Balavasakan said...

பிரிச்சு மேஞ்சிட்டீங்க பிரபாகர் அண்ணே... அடின்னா இதுதான் அடி..

முகிலன் said...

புரிஞ்சிக்கிறவங்களுக்கு சொல்லலாம். புரிஞ்சிக்க மாட்டேன்னு அடம்பிடிக்கிறவங்களுக்கு?

vallavannan said...

வணக்கம்
பிரபா

சுமஜ்லா
//வெத்து வேட்டுக்களின்
வித்தையிங்கு
நஞ்சை விஞ்சிவிடுமா??//
'ஓ' நீங்கள் நஞ்சா .
எங்களால் நஞ்சை விஞ்சமுடியாது தான் .
எப்படிப்பட்ட நஞ்சு என்றுதான் தெரியவில்லை .
தாங்களை நஞ்சு என்று ஒப்புக்கொள்ளும்
நீங்கள்
விமர்சனம் ஏற்று கொள்ளும் பக்குவம் இல்லை
என்பது நகைப்பே .

சுமஜ்லா
//பசுபோட்ட சாணத்தை
தலைமேலே ஏற்றி,//
'திருநீரை' குறிப்பிடுகின்றார்
எவ்வளவு மத துவேசம்
சாது மிரண்டால் என்றும் அரட்டல் .

சுமஜ்லா
//சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும்
கயவர்களின் பட்டாளம்//
உங்களுக்கொள்ளாம் மேடை
அங்குதான் கிடைத்து .
ஈரோட்டில் .

நல்ல வரிகள் .

வாழ்த்துக்கள் .

க.பாலாசி said...

சும்மா பாத்திட்டு போலாம்னு வந்தேன்.

அமுதா கிருஷ்ணா said...

அட கிருஷ்ணா....

பிரபாகர் said...

பின்னூட்டமிட்ட எல்லா அன்பு நெஞ்சங்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.

வால்பையன் said...

நான் கொஞ்ச நாளைக்கு லீவு போட்டுகிட்டுமா!?

RAMYA said...

எல்லாவற்றையும் மறந்து விடுவோம்
புது வருடத்தை நோக்கி செல்வோம் வாருங்கள் சகோதரர்களே!!

malarvizhi said...

கவிதை அருமை.வாழ்த்துக்கள் .

மாயாவி said...

இப்படி உசுப்பேத்தியே அவங்கள பெரியாளாக்கீறாதீங்க.

Dog vs Moon

அவ்வளவுதான்!!

Cable Sankar said...

டபுள் ரைட்டேய்ய்ய்ய்

நேசமித்ரன் said...

:)

நினைவுகளுடன் -நிகே- said...

கவிதை அருமை